கூகுள் மேப்பில் தெரியும்' சிவாஜியின் ரங்கோலி' : வைரலாகும் போட்டோ
வியாழன், 20 ஜூன் 2019 (17:43 IST)
இந்தியாவை ஆண்ட மராட்டிய மன்னர் சிவாஜியின் ரங்கோலி படம் ஒன்று கூகுள் மேப்பில் மேப் செயலியில் பிரமாண்டமாகத் தெரிந்துள்ளது. தற்போது வைரலாகிவருகிறது.
பேரரசர் சிவாஜியின் பிறந்தநாளை முன்னிட்டு , மாகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள லத்தூரில் கடந்த பிப்ரவரி 19 ஆம்தேதி அன்று விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதையொட்டி லத்தூரில் உள்ள நிலங்கா என்ற கிராமத்தில் சத்ரபதி சிவாஜியின் தோற்றம் ரங்கோலி ஓவியமாகத் தீட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்த ஓவியம் 2.4 லட்சம் சதுர அடி, 6 ஏக்கர் பரப்பளவில் ரங்கோலி ஒவியம் போட முயன்றனர்.
இந்த ரங்கோலி ஓவியம் மங்கேஷ் என்பவரால் தீட்டப்பட்டது. இதில் என்ன விஷேசம் என்றால் இந்த தீட்டப்பட்டு 3 மாதங்கள் ஆனபிறகும் கூட இப்போதும் கூகுள் மேப்பில் இதன் ஓவியம் பிரமாண்டமாகத் தெரிகிறது.
மேலும் தற்போது இந்த புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது. இந்த ஓவியத்தைக் காண சத்ரபதி விவாஜி மகராஜ் கிராஸ் போட்டோ பார்ம் என்று தட்டச்சு செய்தால் இந்த ஓவியம் அப்படிய அழகாகத் தெரிகிறது.
This is an incredible Chhatrapati Shivaji Maharaj crop art from the Farmers of small village in Nilanga, Latur, Maharashtra. (WA) pic.twitter.com/QG3sSJqed0