3 கி.மீ., நீளமுள்ள ரயிலை இயக்கி ரயில்வே சாதனை !

Webdunia
வெள்ளி, 3 ஜூலை 2020 (14:53 IST)
இந்தியாவில் பதினைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் ரயில்வே துறையில்  பணியாற்றிக் கொண்டுள்ளனர்.நாடு முழுவதும் தினமும் பல கோடி மக்கள் ரயில் பயணதைத் தேர்ந்தெடுத்து பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் பல புதிய வேலை வாய்ப்புகளையும் ரயில்வேதுறை உருவாக்கி வருகிறது என்பது போன்ற பல்வேறு சிறப்புகள் இந்திய ரயில்வேதுறைக்கு உண்டு.

இந்நிலையில், தென்கிழக்கு மத்திய நாக்பூர் கோட்டத்தில் நிலக்கரி, இரும்பு, இரும்புத் தாது ஏற்றிச் செல்லப் பயன்படுத்தப்படும்  சரக்குப் பெட்டகங்களைக் கொண்ட 4 ரயில்களை ஒன்றாக இணைந்து, சுமார் 2.8 கி.மீ., நீளமுள்ள நீண்ட ரயிலைஉருவாகியுள்ளது.

மேலும்,  இந்த நீளமான ரயிலில் 4 ஜோடி என்ஜின்கள்,  4 கார்டு வேன் போன்றவற்றைக் கொண்டு 251 காலிச் சரக்குப் பெட்டிகள் இணைக்கப்படுள்ளது. இதற்கு சேஷ்நாக் என்ற பெயரிட்டப்பட்டுள்ளது மட்டுமல்லாமல்  தென்கிழக்கு மத்திய ரயில்வே மிக நீளமுள்ள ரயிலை இயக்கிச் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்