முதல் ஒரு வாரத்திற்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து திருப்பதி தேவஸ்தானம் நாளை அவசரக்கூட்டம் நடத்த உள்ளது. ஜூலை மாதத்திற்கு டிக்கெட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளது. அதாவது ஆன்லைன் மூலம் ரூ.9.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள், இலவச தரிசனத்திற்காக மூன்றாயிரம் டோக்கன்கள் வழங்கப்பட்டுவிட்டது.