கோவிந்தா.. கோவிந்தா... திருப்பதியில் கொரோனா பாசிடிவ்!!!

வெள்ளி, 3 ஜூலை 2020 (11:35 IST)
திருப்பதி ஏழுமலையான் கோவியில் 10 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது. இந்த நிலையில் கடந்த மாதம் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை அடுத்து ஜூன் எட்டாம் தேதி முதல் திருப்பதி திறக்கப்பட்டது. 
 
முதல் ஒரு வாரத்திற்கு பிறகு பக்கதர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. மேலும், தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கையும் கணிசமாக உயர்த்தப்பட்டது. இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அர்ச்சகர் உள்பட 10 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 
 
கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் திருப்பதி மூடப்படுமா அல்லது துரித நடவடிக்கை எதேனும் எடுக்கப்படுமா என பொருத்திருந்த பார்க்கவேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்