ஒரே நாளில் 21 அயிரத்திற்கும் மேற்பட்டோர்ப் பாதிக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் மொத்த எண்ணிக்கை 6,25,544 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 18,213 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 3,79,892 ஆக உயர்ந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,86,626 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,178 பேர் பலியான நிலையில் 1,01,172 பேர் குணமடைந்துள்ளனர். இதுதவிர பல மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. மத்திய அரசின் அறிவிப்பின்படி பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக உள்ள மாநிலங்களின் பட்டியல்.
தமிழ்நாடு – 98,392
டெல்லி – 92,175
குஜராத் – 33,913
உத்தர பிரதேசம் – 24,825
மேற்கு வங்கம் – 19,819
தெலுங்கானா – 18,570
ராஜஸ்தான் – 18,662
மத்திய பிரதேசம் – 14,106
கர்நாடகா – 18,016
ஹரியானா – 15,509