திருப்பதி கோயிலில் 10 பேருக்குக் கொரோனா – அவசர ஆலோசனை!

Webdunia
சனி, 4 ஜூலை 2020 (07:59 IST)
திருப்பதி கோயிலில் பணிபுரியும் அர்ச்சகர் உள்பட 11 பேருக்கு கொரோனா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக 75 நாட்களுக்கு மேலாக திருப்பதி ஏழுமலையான் கோவில் மூடப்பட்டு இருந்தது நிலையில் ஐந்தாம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டதை முன்னிட்டு அடுத்து ஜூன் 11 ஆம் கோயில் திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாக பாஸ் வழங்கப்பட்டு, தினசரி 12,000 பேர் வரை அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

இந்நிலையில் அதிர்ச்சி அளிக்கும் விதமாக திருப்பதி கோயிலில் பணிபுரியும் ஒரு அர்ச்சகர் உள்பட 10 பேருக்குக் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று திருப்பதி தேவஸ்தானம் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த இருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்