இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாகவே ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் ஒவ்வொரு நாளும் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்ந்தும் சரிந்தும் வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
அந்த வகையில் கடந்த திங்கள் செவ்வாய் ஆகிய இரண்டு நாளும் உயர்ந்த பங்குச்சந்தை நேற்று சரிந்தது என்பதும் இந்த நிலையில் இன்று மீண்டும் சரிந்து உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சற்றுமுன் மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிந்து 60 ஆயிரத்து 63 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தையான நிப்டி ஐந்து புள்ளிகள் மட்டும் சரிந்து 17910 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. பங்குச்சந்தை மிகப்பெரிய ஏற்ற இறக்கம் இன்றி இன்று தொடங்கியுள்ளதால் முதலீட்டாளர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.