வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றம்.. ஆனால் முதலீட்டாளர்கள் அதிருப்தி..!

திங்கள், 24 ஏப்ரல் 2023 (10:09 IST)
இந்திய பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று வாரத்தின் முதல் நாளான திங்கட்கிழமை பங்குச்சந்தை சற்று உயர்ந்துள்ளது. 
 
ஆனால் அதே நேரத்தில் மிகவும் குறைவாக உயர்ந்துள்ளதால் எந்த நேரத்திலும் பங்குச்சந்தை சரிவில் போக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் முதலீட்டாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தை குறித்து தற்போது பார்ப்போம்.
 
இந்த நிலையில் சற்று முன் பங்கு சந்தை வர்த்தகம் தொடங்கிய நிலையில்  மும்பை பங்குச்சந்தை சற்று முன் 4 புள்ளிகள் உயர்ந்து 59650 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்கு சந்தை நிப்டி 5 புள்ளிகள் உயர்ந்து 17630 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது. 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்