மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. இன்னும் குறையும் என நிபுணர்கள் தகவல்..!

வெள்ளி, 21 ஏப்ரல் 2023 (10:01 IST)
இந்திய பங்குச் சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதும் குறிப்பாக அதானி விவகாரம் ஆரம்பித்ததில் இருந்தே பங்குச்சந்தை சரிவிலிருந்து வருகிறது என்பதையும் பார்த்து வருகிறோம். 
 
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை மீண்டும் சரிந்துள்ளது. மும்பை பங்கு சந்தை சென்செக்ஸ் சற்றுமுன் வர்த்தகம் தொடங்கிய நிலையில் 35 புள்ளிகள் சரிந்து 59 ஆயிரத்து 600 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. 
 
அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 15 புள்ளிகள் சரிந்து 17,617 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களுக்கு பங்குச்சந்தை சரிவுடன் தான் இருக்கும் என்றும் எனவே புதிதாக முதலீடு செய்பவர்கள் சற்று பொறுமை காத்து பங்குச்சந்தை மீண்டும் உயரும் போது வர்த்தகம் செய்யவும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
 
 
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்