இந்திய பங்குச்சந்தையின் இன்றைய நிலை என்ன? சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

Siva
செவ்வாய், 7 மே 2024 (09:43 IST)
இந்திய பங்குச் சந்தை நேற்று காலை உயர்ந்து இருந்தாலும் மதியத்திற்கு மேல் சரிய தொடங்கியது என்பதும் சந்தை வர்த்தகம் முடிவின்போது ஏற்ற இறக்கம் இன்றி முந்தைய நாள் புள்ளிகளில் தான் வர்த்தகம் முடிந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றும் சந்தை ஏற்ற இறக்கம் இன்றி மிகக் குறைந்த புள்ளிகள் மட்டுமே வித்தியாசமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
 
மும்பை பங்குச்சந்தையின் சென்செக்ஸ் வெறும் 10 புள்ளிகள் மட்டுமே குறைந்து 73 ஆயிரத்து 883 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது. அதே போல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 10 புள்ளிகள் உயர்ந்து 22457 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது 
 
பங்குச்சந்தை தேர்தல் முடியும் வரை பெரிய அளவில் ஏற்ற இறக்கம் இருக்காது என்றும் தேர்தல் முடிவடைந்து புதிய அரசு பொறுப்பேற்றவுடன் தான் பங்குச்சந்தையில் மிகப்பெரிய மாற்றம் வரும் என்று கூறப்பட்டு வருகிறது. 
 
இந்த நிலையில் இன்றைய பங்குச் சந்தையில் ஆசியன் பெயிண்ட், ஐடிசி, கோடக் பேங்க் உயர்ந்துள்ளதாகவும் இண்டஸ் இன்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஏர்டெல் ஆகிய பங்குகள் குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
 
 
Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்