மேற்குவங்க மாநிலத்தில் இந்துக்கள் குறி பார்த்து தாக்கப்படுவதால், தற்காப்புக்காக தங்கள் வீடுகளில் இந்துக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பது அவசியம் என பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் என்பவர் கூறி இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில், இந்துக்கள் குறிவைத்து தாக்குவதற்கு கண்டனம் தெரிவித்த பாஜக மூத்த தலைவர் திலீப் கோஷ் ஹிந்துக்கள் தங்கள் வீடுகளில் டிவி, பிரிட்ஜ் உள்பட வீட்டு உபயோகப் பொருட்களை வைத்திருப்பது போல், ஆயுதத்தையும் வைத்துக் கொள்ள வேண்டும், தங்கள் பாதுகாப்புக்கு போலீசை அழைப்பது இனிமேல் பயன்தராது. இந்துக்கள் தாங்களே தங்கள் வீடுகளில் ஆயுதங்களை வைத்திருப்பது அவசியம் என்று பேசினார். அவரது இந்த பேச்சுக்கு வந்த பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
திலீப் கோஷின் இந்த பேச்சை வெறுப்புணர்வை தூண்டும் வகையில் அமைந்துள்ளது என்றும், இரு மத பிரிவினர் இடையே வகுப்புவாதம், மோதலை உருவாக்கவே வழிவகை செய்யும் என்றும், அதன் தலைவர்கள் கூறி வருகின்றனர்.