பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சற்று முன் பங்குச்சந்தை சென்செக்ஸ் குமார் 700 புள்ளிகள் உயர்ந்துள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்திய பங்குச்சந்தை தேர்தல் வரை ஏற்ற இறக்கத்துடன் இருக்கும் என்றும் தேர்தல் முடிவுக்கு பின் அபாரமாக உயரும் என்றும் பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று மும்பை பங்குச் சந்தை 700 புள்ளிகள் அதிகரித்து 74 ஆயிரத்து 426 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல் தேசிய பங்குச்சந்தை நிப்டி 157 புள்ளிகள் உயர்ந்து 22578 என்ற புள்ளிகளில் வர்த்தகம் ஆகி வருகிறது.
இன்றைய பங்குச் சந்தையில் ஒரு சில நிறுவனங்கள் தவர மற்ற அனைத்து நிறுவனங்களின் பங்குகளும் உயர்ந்துள்ளதாகவும் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல லாபம் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது