சாம்சங் செல்போன்கள் இனி 12 நிமிடத்தில் சார்ஜ் ஆகிவிடும்!

Webdunia
வியாழன், 10 ஜனவரி 2019 (11:28 IST)
இன்றைக்கு எல்லோருமே கையில் எப்போதும் ஸ்மார்ட் போன் வைத்திருப்பது வழக்கமான ஒன்றாகிவிட்டது.



இதில் நாம் போன் பேசி வருமோ இல்லையோ எந்த நேரம் இன்டர்நெட் இணைப்புடன் இருந்தாக வேண்டிய நிலையில் இருக்கிறோம். இந்த இன்டர்நெட்டுக்கான wifi data போன்றவற்றை ஆன் செய்து வைத்திருப்பதால் ஸ்மார்ட்போன்களில் விரைவாக சார்ஜ் தீர்ந்து விடுகிறது.  ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் சார்ஜ் செய்ய வேண்டிய கட்டாயமும் நமக்கு ஏற்படுகிறது.
 
நாம் பயன்படுத்தும் ஸ்மார்ட் போன்களில் பொதுவாக லித்தியம் அயன் பேட்டரி தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த பேட்டரிகளை சார்ஜ் செய்ய குறைந்தது ஒரு மணி நேரத்துக்கு மேல ஆகும். இதனால் ஒரு மணி நேரத்திற்கு செல்போனில் நம்மால் எதுவும் செய்ய முடியாத நிலை இருக்கிறது. விரைவாக சார்ஜ் ஏறினால் நமக்கு இணையதள பயன்பாட்டுக்கு உதவியாக இருக்கும் என்று எண்ணுவோம். செல்போனை வைத்து பத்து நிமிடத்தில் முழு சார்ஜ் ஏறினால் இன்னும் அருமையாக இருக்கும் என்று நினைப்பவர்களும் உண்டு.  இந்நிலையில் இவர்களுக்காகவே சாம்சங் நிறுவனம் பத்து, பனிரெண்டு நிமிடங்களில் சார்ஜ் ஆகும் வகையிலான கிராபைன் பேட்டரியை புதிய ஸ்மார்ட் போன்களில்  பயன்படுத்த திட்டமிட்டுள்ளது.  ஒரு மணி நேரத்தில் எவ்வளவு அளவிற்கு லித்தியம் அயன் பேட்டரி சார்ஜ் ஆகிறதோ அந்த இலக்கை 
கிராபைன் பேட்டரிகள் வெறும் 12 நிமிடத்தில்எட்டிவிடுமாம். ஆனால் இந்த கிராபைன் பேட்டரிகளின் விலை கொஞ்சம் கூடுதலாகத்தான் இருக்கும் . இந்த பேட்டரி  அதிகளவில் தயாரிக்கப்படும் போது விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்