சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனில் இன்ஃபினிட்டி-ஒ டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஏ8எஸ் மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. இன்ஃபினிட்டி-ஒ ரக டிஸ்ப்ளே கொண்ட கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் ஸ்கிரீன், இன்-டிஸ்ப்ளே செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்ப்ளேவினை சாம்சங் இன்ஃபினிட்டி-ஒ என அழைக்கிறது.
புது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் 6.7 எம்.எம். அளவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 5 எம்.பி. டெப்த் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
டிஸ்ப்ளேவினை சாம்சங் இன்ஃபினிட்டி-ஒ என அழைக்கிறது.
புது ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேவில் 6.7 எம்.எம். அளவில் சிறிய துளையிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஸ்னாப்டிராகன் 710 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜி.பி. ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ மற்றும் மூன்று பிரைமரி கேமரா செட்டப் வழங்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் 24 எம்.பி. பிரைமரி கேமரா, f/1.7, 10 எம்.பி. டெலிஃபோட்டோ லென்ஸ், f/2.4, 5 எம்.பி. டெப்த் கேமரா சென்சார் வழங்கப்பட்டுள்ளது. பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கும் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போனில் 3400 எம்.ஏ.ஹெச். பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ8எஸ் ஸ்மார்ட்போன் புளு, கிரே மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சீனாவில் டிசம்பர் 21ம் தேதி முதல் முன்பதிவு செய்யப்படும் கேலக்ஸி ஏ8எஸ் விலை பற்றி எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை.