தென்கொரிய நிறுவனமான சாம்சங் ஸ்மார்ட்போன் மட்டுமின்றி டிவி போன்ற சாதனங்களை தயாரித்து வருகிறது. மிகவும் பிரபலமான பிராண்டாக உள்ள சாம்சங் தனது விளம்பரம் ஒன்றில் செய்துள்ள பித்தலாட்டம் அம்பலமாகியுள்ளது.
சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனையில் உலக அளவில் மிகப் பிரபலமாக விளங்குகிறது. அதில் முக்கிய பங்கு ஸ்மாட்போன்களுக்கு உண்டு. சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கென்றே தனி ரசிகர்கள் உள்ளார்கள்.
இந்நிலையில் சாம்சங் நிறுவனம் மலேசியாவில் சமீபத்தில் வெளியிட்ட விளம்பரம் ஒன்றினால் சிக்கலில் சிக்கியுள்ளது. அதாவது சாம்சங் நிறுவனம் கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலுக்காக மலேசியாவில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டது.
அந்த விளம்பரத்தில் கேலக்ஸி ஸ்டார் 8 மொபைலின் கேமராவின் தரம் குறித்து விளக்க அந்த ஸ்மார்ட்போன் மூலம் எடுக்கப்பட்டதாக புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது.
ஆனால் உண்மையில் அந்த புகைப்படம் டிஎஸ்எல்ஆர் கேமராவில் எடுக்கப்பட்டது என்று அந்த புகைப்படத்தை எடுத்த புகைப்பட கலைஞர் தெரிவித்துள்ளார். இதனால், வாடிக்கையாளர்களின் அதிருப்தியை சம்பாதித்ததோடு சர்ச்சையிலும் சிக்கியுள்ளது சாம்சங் நிறுவனம்.