Airtel, Vodafone - ஐ அடுத்து JIO -வும் கட்டணத்தை உயர்த்துகிறது...மக்கள் அதிர்ச்சி !

Webdunia
செவ்வாய், 19 நவம்பர் 2019 (20:35 IST)
நஷ்டம் காரணமாக வோடபோன்-ஐடியா மற்றும் ஏர்டெல் ஆகிய இரு நிறுவனங்களும் தங்கள் சேவைக்கட்டணத்தை உயர்த்வுள்ளதாக செய்திகள் வெளியான நிலையில், இந்தியாவில் மிகப்பெரிய நெட்வொர்க் சேவையைக் கொண்டுள்ள ரிலையன்ஸ் ஜியோ வரும் டிசம்பர் 1 ஆம் தேதிமுதல் தனது கட்டண உயர்வை அறிவிக்கவுள்ளது.
ஜியோவின் வருகைக்குப் பிறகு பிற இந்திய தொலை தொடர்பு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதில் முன்னனி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் தப்பவில்லை. தென் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவிட்டு சென்றது.
 
இந்நிலையில் நிதி அழுத்தம் காரணமாக வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவைக்கட்டணத்தை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து உயர்த்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுத்ப்படுத்தியுள்ளார். இதனால் இந்த இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், ஏர்டெல், வோடபோனை நெட்வோர்க் நிறுவனங்களைத் தொடர்ந்து, முகேஷ் அம்பானியின்  ரிலையன் ஜியோவும் சேவைக் கட்டணத்தை உயர்த்தவுள்ளதாக அறிவித்துள்ளது.
 
இந்தியாவின் நம்பர் ஒன் நெட்வொர்காக அதிக மக்களால் பயன்படுத்தப்படும் ஜியோ வரும் டிசம்பர் ஒன்றாம் தேதி முதல் இந்த புதிய சேவை கட்டண உயர்வை அறிவிக்க உள்ளதாக  தெரிவித்துள்ளது. இதனால் இத்தனை நாட்களாக மக்கள் பல ஆஃபர்களை வாரி இறைத்துவந்த ஜியோவால் பயனடைந்த வாடிக்கையாளர்கள் ம் மற்றும் ஏர்டெல், வோடபோன் நிறுவன வாடிக்கையாளர்கள் பெரிதும், அதிர்ச்சி அடைந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்