ம்ம்ம்ஹூம்... ஒன்னும் தேரல: அப்செட்டில் ஏர்டெல்!!

செவ்வாய், 19 நவம்பர் 2019 (16:33 IST)
நஷ்டங்களை சமாளிக்க வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனம் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக அறிவித்த நிலையில் இந்நிற்ய்வனங்களின் பங்குகள் உயர்ந்துள்ளது.   
 
ஜியோவின் வருகைக்கு பிறகு முதன்மையான நிறுவனங்களான ஏர்செல், ஏர்டெல், வோடஃபோன் போன்ற நிறுவனங்கள் பலத்த வீழ்ச்சியை சந்தித்துள்ளன. இதில் ஏர்செல் நிறுவனம் திவாலானது. அதைத் தொடர்ந்து இந்திய தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் உள்ள ஏர்டெல், ஐடியா, வோடபோன் மற்றும் பிற நிறுவனங்கள் தங்களை பலப்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியத்தை உணர்ந்தன.
 
மேலும், ஜியோ நிறுவனம் தொலைத்தொடர்பு கூட்டமைப்பில் இல்லாததால் விதிமுறைகள் ஏதுமின்றி சலுகைகள் அளித்து வருகின்றனர். மேலும் தற்போது வோடஃபோன் அரசுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகையை வழங்கவேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது. 
இந்நிலையில் வோடபோன், ஏர்டெல் ஆகிய நிறுவனங்களின் சந்தை மதிப்பு சரிவை கண்டுவருகிறது. எனவே தொழில்போட்டி மற்றும் நஷ்டத்தின் காரணமாக இதை சமாளிக்கு பொருட்டு வரும் டிசம்பர் மாதம் முதல் சேவை கட்டணங்களை உயர்த்த போவதாக வோடபோன் ஐடியா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் அறிவித்தது. 
 
இதன் விளைவாக பங்கு சந்தையில் வோடபோன், ஏர்டெல் நிறுவனங்களின் பங்குகள் அதிகரித்துள்ளது. ஏர்டெல் நிறுவனத்தில் பங்குகள் 6%, வோடபோன் ஐடியா பங்குகள் 28.2% அதிகரித்துள்ளது. இதிலும் குறைந்த அளவே ஏர்டெல் பங்கு சதவீதம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்