அமெரிக்க அதிபர் ட்ரம்ப், இந்தியா, சீனா உள்பட பல நாடுகளுக்கு கூடுதல் வரிவிதிப்பு காரணமாக, உலக நாடுகளின் பங்குசந்தைகள் சரிந்து வருகின்றன. ஆனால் ட்ரம்பின் அறிவிப்பால் எந்தவிதமான தாக்கமும் இன்றி, தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே இருக்கிறது.
அந்த வகையில் இன்றும் தங்கம் விலை உயர்ந்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இன்று சென்னையில் ஒரு கிராம் 65 ரூபாயும், ஒரு சவரன் 520 ரூபாய் உயர்ந்துள்ள நிலையில், இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை குறித்த நிலவரங்களை பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கிராமுக்கு 65 ரூபாய் உயர்ந்து ரூபாய் 8,290 என விற்பனையாகிறது. அதேபோல் சென்னையில் ஆபரணத் தங்கம் ஒரு சவரன் விலை ரூபாய் 520 உயர்ந்து ரூபாய் 66,320 என விற்பனையாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூபாய் 9,043 எனவும் ஒரு சவரன் ரூபாய் 72,344 எனவும் விற்பனையாகி வருகிறது. சென்னையில் இன்று வெள்ளியின் விலை ஒரு கிராம் ரூபாய் 102.00 எனவும், ஒரு கிலோ விலை ரூபாய் 102,000.00 எனவும் விற்பனையாகி வருகிறது