ஜியோவின் வருகைக்குப் பிறகு பிற இந்திய தொலை தொடர்பு நிறுவனங்கள் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதில் முன்னனி நிறுவனங்களாக இருந்த ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா போன்ற நிறுவனங்களும் தப்பவில்லை. தென் இந்தியாவின் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றான ஏர்செல் நிறுவனம் தனது சேவையை நிறுத்துவிட்டு சென்றது.
இந்நிலையில் நிதி அழுத்தம் காரணமாக வோடபோன் மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் தங்கள் சேவைக்கட்டணத்தை டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் இருந்து உயர்த்த இருப்பதாக சொல்லப்படுகிறது. இதனை ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் உறுத்ப்படுத்தியுள்ளார். இதனால் இந்த இரு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே ஜியோ தனது வாடிக்கையாளர்களிடம் ஐயுசி கட்டணம் வசூலித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.