அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு 104 சதவீத வரி விதித்ததை அடுத்து, இன்று இந்திய பங்குச்சந்தை உள்பட ஆசிய பங்குச்சந்தைகள் படுமோசமாக சரியும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்திய பங்குச்சந்தை வர்த்தகம் சற்றுமுன் தொடங்கிய நிலையில், பெரிய அளவில் சரிவில்லை என்றும் சென்செக்ஸ் சுமார் 350 புள்ளிகள் மட்டுமே சரிந்து உள்ளதெனவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் அதே நேரத்தில், ஜப்பான் பங்குச்சந்தை 1300-க்கும் அதிகமான புள்ளிகள் சரிந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் 369 புள்ளிகள் சரிந்து, 73,856 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது. அதேபோல், தேசிய பங்குசந்தை நிஃப்டி 140 புள்ளிகள் சரிந்து, 22,034 என்ற புள்ளிகளில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இன்றைய பங்குச்சந்தையில் அப்போலோ ஹாஸ்பிடல், ஆசியன் பெயிண்ட், பாரதி ஏர்டெல், எச்டிஎப்சி வங்கி, ஹிந்துஸ்தான் யூனிலீவர், ஐடிசி, மாருதி, நெஸ்ட்லே இந்தியா உள்ளிட்ட பங்குகள் உயர்ந்துள்ளன.
ஆனால் அதே நேரத்தில், ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், சிப்லா, கோல் இந்தியா, டாக்டர் ரெட்டி, எச்.சி.எல். டெக்னாலஜி, ஹீரோ மோட்டார்ஸ், ஐசிஐசிஐ வங்கி, இன்டஸ் இன்ட் வங்கி, இன்போசிஸ், கோடக் மகேந்திரா வங்கி உள்ளிட்ட பங்குகள் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.