என்ன ஸ்ரேயாஸ் ஐயர் நடுவரா இருக்காரு… இணையத்தில் வைரலான புகைப்படம்!

Webdunia
சனி, 30 செப்டம்பர் 2023 (13:40 IST)
பாகிஸ்தான் மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதிய உலகக் கோப்பை பயிற்சி போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி நிர்ணயித்த 345 ரன்களை நியுசிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இந்த போட்டியில் கவனம் பெற்ற அம்சமாக நடுவர் அக்‌ஷய் டோட்ரே அமைந்தார். பார்ப்பதற்கு இந்திய கிரிக்கெட் அணியின் நடுவரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் ஐயர் போலவே இருக்க, அவரின் புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில் பகிர்ந்து வைரலாக்கி வருகின்றனர்.

சமீபகாலமாக காயத்தால் அவதிப்பட்டு வந்த ஸ்ரேயாஸ் ஐயர் இப்போது முழுவதும் குணமாகி உலக்கோப்பை தொடரில் விளையாட தயாராகி வருகிறார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்