அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர்.
இந்நிலையில் உலகக் கோப்பை தொடரை ஒளிபரப்பும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் ஆங்கிலம் உள்பட பிராந்திய மொழிகளிலும் வர்ணனையை வழங்கி வருகிறது. இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை தொடருக்கான வர்ணனையாளர் குழுவை அறிவித்துள்ளது.