அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு..! விக்கெட்டை வீழ்த்தி டக்கெட்டை சீண்டிய சிராஜ்! அபராதம் விதிக்கப்படுமா?

Prasanth K

திங்கள், 14 ஜூலை 2025 (09:23 IST)

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் நாளுக்கு நாள் உக்கிரமடைந்து வருகிறது.

 

முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ள நிலையில், மூன்றாவது போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் தீவிரமாக போட்டியிட்டு வருகின்றன. முதல் முதல் இன்னிங்ஸில் இரு அணிகளுமே 387 என்ற ரன்னில் சமநிலையில் இருந்த நிலையில் நேற்று இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்தை 192 ரன்களில் ஆல் அவுட் செய்தது இந்தியா.

 

இந்த போட்டியின்போது இங்கிலாந்து ஓப்பனிங் பேட்ஸ்மேன் பென் டக்கெட்டின் விக்கெட்டை சிராஜ் வீழ்த்தினார். அதுவும் 5.5வது ஓவரிலேயே..! விக்கெட்டை வீழ்த்தியதும் டக்கெட் முகத்திற்கு நேராக சென்று ஆவேசமாக கத்திய சிராஜ், அவரது தோள்பட்டை மீது மோதிச் சென்றார். ஆனால் இதற்கு டக்கெட் எந்த ரியாக்‌ஷனும் காட்டாமல் அமைதியாக வெளியேறினார்.

 

சிராஜின் இந்த ஆக்ரோஷ செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிராஜுக்கு அபராதம் விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகிறது. முன்னதாக க்ராலியிடம் சுப்மன் கில் எகிறியதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. தொடர்ந்து அடுத்தடுத்த போட்டிகளில் இரு அணிகளிடையே இதை விட அதிகமான உஷ்ண பரிமாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்