94க்கு 7 விக்கெட்.. ஒரே நம்பிக்கை நட்சத்திரம் ஜடேஜா.. தோல்வியை தவிர்க்குமா இந்தியா?

Mahendran

திங்கள், 14 ஜூலை 2025 (16:38 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் ஐந்தாவது நாளான இன்று, இந்திய அணி 94 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை தவிர்க்க போராடி வருகிறது. இங்கிலாந்தின் ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி இந்திய விக்கெட்டுகளை வீழ்த்தி வருகின்றனர்.
 
முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து 387 ரன்கள் அடித்த நிலையில், இந்தியாவும் முதல் இன்னிங்ஸில் 387 ரன்கள் அடித்து சமன் செய்தது. இதனை அடுத்து, இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து களமிறங்கி 192 ரன்கள் எடுத்தது. 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இரண்டாவது இன்னிங்ஸில் வெற்றி இலக்கை நோக்கி ஆடிய இந்தியாவுக்கு ஆரம்பமே அதிர்ச்சி. ஜெய்ஸ்வால், டக் அவுட் ஆக, கேப்டன் கில் 6 ரம்ல:ஒ; அவுட்டானார். அதன் பிறகு கேப்டன் கே.எல். ராகுல், ரிஷப் பண்ட், வாஷிங்டன் சுந்தர் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். 
 
இந்த நிலையில், தற்போது ஜடேஜா 12 ரன்களுடன் விளையாடி வருகிறார். களத்தில் இருக்கும் ஒரே பேட்ஸ்மேன் அவர்தான் என்பதால், அவர் மட்டுமே நம்பிக்கை நட்சத்திரமாக இந்திய ரசிகர்களால் பார்க்கப்படுகிறார். அவர் இந்த போட்டியை வென்று கொடுப்பாரா அல்லது டிரா செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Mahendran
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்