ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!

Siva

திங்கள், 14 ஜூலை 2025 (17:57 IST)
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி தற்போது நடைபெற்று வரும் நிலையில், இந்தப் போட்டியில் கார்ஸ் பந்தை ஜடேஜா அடித்து விட்டு ரன் ஓடும்போது அவர் கார்ஸுடன் மோதிய காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது. 
 
இதனை அடுத்து, ஜடேஜா இரண்டு ரன்கள் எடுத்து முடித்தவுடன் கார்ஸை நோக்கி பயங்கர கோபத்துடன் வாக்குவாதம் செய்தார் என்றும், பதிலுக்கு கார்ஸ் வாக்குவாதம் செய்ய, அந்த இடத்தில் ஒரு பதட்டமான சூழல் ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 
அந்த வீடியோவை பார்க்கும்போது, ஜடேஜா ரன் எடுக்க முயற்சி செய்தபோது கார்ஸ் வேண்டுமென்றே ஜடேஜாவின் கழுத்தை பிடித்தது போல் தெரிகிறது. இதனால் தான் ஜடேஜா கோபப்பட்டார் என்பதும், கார்ஸ் பதிலுக்கு கோபப்பட்ட நிலையில், பென் ஸ்டோக்ஸ் தலையிட்டு நிலைமையை கட்டுப்படுத்தினார் என்றும் வீடியோவில் இருந்து தெரிய வருகிறது.
 
இந்த நிலையில், இந்திய அணி எட்டாவது விக்கெட்டையும் இழந்தது. நிதிஷ் குமார் ராணா 13 ரன்களில் அவுட் ஆகிவிட்டார். ஜடேஜா மட்டுமே தற்போது தனி ஆளாக போராடி கொண்டிருக்கிறார். இந்தியா வெற்றி பெற இன்னும் 81 ரன்கள் தேவை என்பதும், இங்கிலாந்து வெற்றி பெற இன்னும் இரண்டு விக்கெட்டுகள் மட்டுமே தேவை என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran

Drama, more drama! ????#ENGvIND ???? 3rd TEST, DAY 5 | LIVE NOW on JioHotstar ???? https://t.co/DTsJzJLwUc pic.twitter.com/eiakcyShHV

— Star Sports (@StarSportsIndia) July 14, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்