தன் இடத்தில் கான்கீரிட் போட்டு அமர்ந்த கே எல் ராகுல்!

Webdunia
வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:37 IST)
இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரராக கே எல் ராகுல் தன்னை நிரூபித்துக் கொண்டுள்ளார்.

நடந்து முடிந்த இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற இருந்த நிலையில் கடைசி நாள் மழையால் ஆட்டம் பாதிக்கப்பட்டதால் டிராவில் முடிந்தது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு அணியில் இடம் கிடைத்த கே எல் ராகுல் முதல் இன்னிங்ஸில் சிறப்பாக விளையாடி தனது இடத்தை உறுதி செய்துகொண்டுள்ளார்.

முதல் டெஸ்ட் போலவே இரண்டாவது டெஸ்ட்டிலும் சிறப்பாக விளையாடி சதம் அடித்து அவுட் ஆகாமல் களத்தில் இருக்கிறார். இதன் மூலம் தன்னை டெஸ்ட்டுக்கான தொடக்க ஆட்டக்காரராக அவர் நிருபித்து விட்டார். ஏற்கனவே அவர் ஒரு நாள் மற்றும் டி 20 போட்டிகளிலும் அவர் தனக்கான இடத்தை பிடித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்