தமிழகத்தில் உள்ள கட்டுப்பாட்டு பகுதிகளின் எண்ணிக்கை: சுகாதாரத்துறை தகவல்!

வியாழன், 12 ஆகஸ்ட் 2021 (20:08 IST)
தமிழகத்தில் தற்போது கொரோனா கட்டுப்பாட்டு கருவிகள் எண்ணிக்கை குறித்து சுகாதாரத்துறை சற்றுமுன் அறிவித்துள்ளது 
 
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 471 கொரோனா கட்டுப்பாடுகள் பகுதிகள் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் சென்னையில் மட்டும் 85 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
கடந்த ஜூலை 23ஆம் தேதி இருந்த 9 மாவட்டங்களில் கட்டுப்படுத்த பகுதிகள் முழுமையாக அகற்றும் செய்யப்பட்டுள்ளன என்றும் சுகாதாரத் துறை அறிவித்துள்ளது. ஈரோடு பகுதியில் 46 கட்டுப்பாட்டு பகுதிகள், நீலகிரி மாவட்டத்தில் 43 கட்டுப்பாட்டு பகுதிகள், தஞ்சாவூர் பகுதியில் 40 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன என்று தமிழக அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது 
 
தமிழகத்தில் சென்னையில் மட்டும் முதல் அலையின்போது 500க்கும் மேற்பட்ட கட்டுப்பாட்டுப் பகுதிகளில் இருந்த நிலையில் தற்போது தமிழகம் முழுவதும் 500க்கும் குறைவான கட்டுப்பாட்டு பகுதியில் தான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்