3வது அலை வந்தாலும், வராவிட்டாலும் முன்னெச்சரிக்கை வேண்டும் - தமிழிசை!

வெள்ளி, 13 ஆகஸ்ட் 2021 (09:23 IST)
புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா 3 வது அலை குறித்து முன்னெச்சரிக்கையாக இருக்க மக்களுக்கு அறிவுறுத்தல். 

 
கொரோனா பாதிப்புகள் காரணமாக இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு தீவிரப்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது தினசரி பாதிப்புகள் மெல்ல குறைய தொடங்கியுள்ளது. முன்னதாக 1 லட்சத்திற்கும் அதிகமாக இருந்த பாதிப்புகள் சமீபகாலமாக 50 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. 
 
இதனிடையே 3 ஆம் அலை எச்சரிக்கைக்கும் விடப்பட்டுள்ளது. இந்நிலையில் புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கொரோனா 3 வது அலை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்வதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
 
கொரோனா மூன்றாவது அலை வந்தாலும், வராவிட்டாலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும். தடுப்பூசி செலுத்திக் கொள்ள பலர் தயக்கம் காட்டுகின்றனர். ஆனால், தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என தெரிவித்துள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்