இம்முறை கோலி, ரோஹித் மற்றும அஸ்வின் ஆகிய் மூன்று மூத்த வீரர்கள் இல்லாமல் இளம் வீரர்களைக் கொண்ட அணி இங்கிலாந்துக்கு சென்றுள்ளது. இந்த இளம் அணிக்குக் கேப்டனாக ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் இந்திய அணியின் வெற்றி என்பது இந்த தொடரில் கேள்விக்குறியாகவுள்ளது.
இங்கிலாந்தில் அனுபவமற்ற இந்திய அணிக்கு அனுபவமுள்ள கம்பீர் தலைமைப் பயிற்சியாளராக இருப்பது அனுகூலமாக பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் கம்பீரின் தாய்க்கு நெஞ்சு வலி ஏற்பட்டதன் காரணமாக அவர் அவசரமாக கடந்த 13 ஆம் தேதி இந்தியா திரும்பினார். இந்நிலையில் இன்று அவர் மீண்டும் இங்கிலாந்துக்குப் பயணம் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.