பிசிசிஐ-யுடன் ஒத்துப் போகாதீர்கள்… கிரிக்கெட் வாரியங்களுக்குப் பாகிஸ்தான் வீரர் வேண்டுகோள்!

vinoth
ஞாயிறு, 2 மார்ச் 2025 (13:39 IST)
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி தங்கள் போட்டிகள் அனைத்தையும் துபாயில் மட்டுமே விளையாடுகிறது. மற்ற அணிகள் இந்தியாவுடன் விளையாட துபாய்க்கு வந்து செல்கின்றன. இதனால் மற்ற அணிகளுக்கு பயனக் களைப்பு மற்றும் தட்பவெப்ப நிலை மாறுதல் போன்ற எதிர்மறை அம்சங்கள் உள்ளன. ஆனால் இந்திய அணிக்கு அப்படியெதும் இல்லை.

இந்நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் பிசிசிஐயின் ஆதிக்கத்தை முடிவுகட்ட மற்ற நாட்டு கிரிக்கெட் வாரியங்கள் ஒன்றுசேரவேண்டும் எனக் கூறியுள்ளார். அதில் “இந்திய அணி   சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் ஒரே மைதானத்தில் விளையாடுவதைக் கூட விட்டுவிடுவோம்.

ஆனால் மற்ற நாட்டு வீரர்களை எல்லாம் ஐபிஎல் தொடரில் விளையாட அழைக்கும் பிசிசிஐ, தம் வீரர்களை மட்டும் மற்ற நாட்டு வாரியங்களின் தொடரில் விளையாட அனுமதிப்பதில்லை. அப்படி இருக்கையில் மற்ற வாரியங்கள் ஏன் வீரர்களை ஐபிஎல் தொடருக்கு அனுப்ப வேண்டும்?” எனக் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்