நேற்றைய போட்டியில் சிறந்த ஃபீல்டருக்கான விருதைப் பெற்ற கோலி..!

vinoth

திங்கள், 3 மார்ச் 2025 (11:19 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இதன்மூலம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்ததால், மொத்தம் 249 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45.2 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது.  வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் கோலி, ஒரு நம்ப முடியாத கேட்ச்சால் தன்னுடைய விக்கெட்டை இழந்தார். ஆனால் திரும்ப அவர் ஃபீல்ட் செய்யும் போது மிக சிறப்பாக செயல்பட்டார். மேட் ஹென்ரியின் கேட்ச்சை அசாத்தியாமாகப் பிடித்தார். இதனால் போட்டி முடிந்ததும் பிசிசிஐ அவருக்கு சிறந்த களப்பணியாளருக்கான மெடலை வழங்கியது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்