இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் - பார்சிலோனா கால்பந்து போட்டி: ரசிகர்கள் மகிழ்ச்சி

Mahendran

வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (16:27 IST)
இந்தியாவில் முதல்முறையாக ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகள் மோதும் கால்பந்து போட்டி நடைபெற உள்ளன. இதனால் கால்பந்து ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். 
 
உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் கொண்ட இந்த இரண்டு அணிகளும், பல உலகப் புகழ் பெற்ற வீரர்களை பெற்றுள்ளது. குறிப்பாக  ரியல் மாட்ரிட் அணிக்காக ரோனால்டோ, பார்சிலோனாவுக்காக மெஸ்ஸி போன்ற வீரர்கள் விளையாடியுள்ளனர். தற்போது மெஸ்ஸி இன்டர்மயாமி அணியில், ரோனால்டோ அல் நசார் அணியில் விளையாடி வருகிறார்.
 
இந்நிலையில் ரியல் மாட்ரிட் மற்றும் பார்சிலோனா அணிகளுக்கு இடையிலான கால்பந்து  போட்டி ஏப்ரல் 6ம் தேதி ரவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டேல் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பல உலகப் புகழ்பெற்ற கால்பந்து பிரபலங்கள் பங்கேற்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்