அக்ஸர் படேலின் காலைத் தொடச் சென்ற விராட் கோலி.. ஓ இதுதான் காரணமா?

vinoth

திங்கள், 3 மார்ச் 2025 (11:14 IST)
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையே நேற்று நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில், இந்திய அணி அபார வெற்றி பெற்றது.  இதன்மூலம் இந்திய அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ள உள்ளது.

நேற்று நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயர் அபாரமாக விளையாடி 79 ரன்கள் சேர்த்ததால், மொத்தம் 249 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து, 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 45.2 ஓவர்களில் 205 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தது.  வில்லியம்சன் 81 ரன்கள் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. நேற்றைய போட்டியில் வருண் சக்கரவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றி, ஆட்ட நாயகன் விருதை பெற்றார்.

இந்த போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் நியுசிலாந்து அணியின் கேன் வில்லியம்ஸன் மட்டும் தன்னுடைய விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் நிதானமாக ஆடிவந்தார். அவரை அக்ஸர் படேல் அவுட் ஆக்கிய போதுதான் இந்தியாவின் கைகளில் வெற்றி வந்து சேர்ந்தது. அப்போது அக்ஸர் படேலைப் பாராட்டும் விதமாக கோலி, அக்ஸரின் காலைத் தொட சென்றார். ஆனால் அதைப் பார்த்து சுதாரித்த அக்ஸர் படேல் அவரைத் தன் காலை தொட விடாமல் தடுத்தார். இது சம்மந்தமான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

Kohli touching Axar Patel's feet after he got Williamson out ????#Kohli #AxarPatel #INDvNZ #ChampionsTrophy2025 pic.twitter.com/mJmgQ95Y15

— Tarun Lulla (@ayotarun) March 2, 2025

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்