பாகிஸ்தானில் உள்ள மசூதியில் மனித வெடிகுண்டு தாக்குதல்.. 5 பேர் பரிதாப பலி.!

Siva

வெள்ளி, 28 பிப்ரவரி 2025 (19:18 IST)
பாகிஸ்தானில் உள்ள வடமேற்கு மாகாணத்தில்  இன்று ஒரு மசூதியில் தொழுகை நடைப்பெற்று கொண்டிருந்தது. வெள்ளிக்கிழமை என்பதால் ஏராளமான பொதுமக்கள் தொழுகை செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென சக்தி வாய்ந்த வெடிகுண்டு வெடித்தது.
 
இந்த தாக்குதலில் சம்பவம் நடந்த இடத்திலேயே 5 பேர் உயிரிழந்தனர், மேலும் 20 பேர் காயமடைந்தனர். இந்த தாக்குதல் மனித வெடிகுண்டு தாக்குதலாக இருக்கலாம் என பாகிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.
 
இந்த தாக்குதல் குறிப்பிட்ட ஒருவரை கொல்லும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த நபர் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
இந்த சம்பவத்திற்கு பாகிஸ்தான் அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்