இந்திய வீரர்களை கேவலமாக பேசிய ஆஸ்திரேலிய ரசிகர்கள்! – பந்து வீச்சை நிறுத்திய சிராஜ்!

Webdunia
ஞாயிறு, 10 ஜனவரி 2021 (11:01 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் ரசிகர்கள் கேவலமாக பேசியதால் பந்து வீச்சை சிராஜ் நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகின்றன. முன்னதாக நடந்து முடிந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ள நிலையில், மூன்றாவது டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது. இதன் இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வரும் நிலையில் ஆஸ்திரேலிய 312 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதை தொடர்ந்து இந்தியா பேட்டிங் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்தபோது இந்தியா அணி வீரர் சிராஜ் பந்து வீசினார், அப்போது ஆஸ்திரேலிய ரசிகர்கள் சிலர் இனவெறியாக பேசியதால் சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் சிராஜ் பந்துவீச்சை நிறுத்தியதால் பரபரப்பு எழுந்தது. இதனால் 10 நிமிட காலம் ஆட்டம் தடைப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்