LSG vs KKR: இன்றைய ஐபிஎல் போட்டியின் மதிய போட்டியில் LSG vs KKR அணிகள் மோதிக் கொண்ட நிலையில் அதிரடியாக அடிய லக்னோ அணி 239 ரன்களை டார்கெட்டாக செட் செய்துள்ளது.
டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்து லக்னோவை ரன்களில் கட்டுப்படுத்த முடிவு செய்தது. ஆனால் பவர் ப்ளே முடியும் வரை கொல்கத்தாவில் விக்கெட்டையே வீழ்த்த முடியாத நிலையில் ஓபனிங் இறங்கியிருந்த எய்டன் மக்ரம், மிட்ஷெல் மார்ஷ் கூட்டணி கொல்கத்தாவை பந்தாடியது. எய்டன் மெக்ரம் 28 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என மொத்தம் 47 ரன்கள்.
10வது ஓவரில் மக்ரம் அரைசதம் அடிக்காமல் அவுட் ஆனதுதான் கொல்கத்தாவுக்கு ஆறுதல். அடுத்து களமிறங்கிய நிக்கோலஸ் பூரன் மார்ஷூடன் பார்ட்னர்ஷிப் அமைக்க, மொத்த மைதானமும் வானத்தை மட்டுமே பார்க்கும்படியாக பவுண்டரி, சிக்ஸர் மழைதான்.
15.2 ஓவர் வரை அதிரடி சரவெடியாக வெடித்த மிட்செல் மார்ஷ் 48 பந்துகளில் 6 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களை விளாசி 81 ரன்களை குவித்திருந்தார். அவரது சதத்தை அவர் நெருங்கிக் கொண்டிருந்தபோது ஆண்ட்ரே ரஸல் பவுலிங்கில் ரிங்கு சிங்கிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
ஆனால் நிக்கோலஸ் பூரன் தனது சூறாவளி பேட்டிங்கை நிறுத்தவில்லை. அவுட்டே ஆகாமல் அடித்து துவைத்த பூரன் மார்ஷையும் மிஞ்சிப்போய் 36 பந்துகளில் 7 பவுண்டரிகள், 8 சிக்ஸர்களை போட்டு தாக்கி 87 ரன்களை குவித்தார். அவரது சதத்தை அவர் நிறைவு செய்வதற்கு ஓவரே முடிந்துவிட்டது. லக்னோவின் சூறாவளி பந்து வீச்சு பெர்பாமன்ஸால் தற்போது 239 ரன்கள் டார்க்கெட்டாக வந்து நிற்கிறது.
இந்த சீசன் தொடங்கி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சேஸ் செய்ய போகும் பெரிய இலக்கு இதுதான் என்பதால் என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
Edit by Prasanth.K