LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

Prasanth Karthick

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (19:47 IST)

LSG vs KKR: லக்னோ நிர்ணயித்த 239 என்ற இலக்கை முடிந்தளவு நெருங்கி நூலிழையில் வெற்றியை தவறவிட்டுள்ளது கொல்கத்தா அணி.

 

சேஸிங்கில் இறங்கிய கொல்கத்தாவின் ஓப்பனிங் பேட்ஸ்மேன் டி காக் - சுனில் நரைன் இருவரும் ஆரம்பமே அடித்து ஆடத் தொடங்கினார்கள். ஆனால் டி காக் 9 பந்துகளில் 15 ரன்களில் அவுட்டானார். சுனில் நரைன் அதிரடியாக ஆடி 13 பந்துகளில் 4 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசி 30 எடுத்திருந்த நிலையில் அவுட்டானார்.

 

ஆனால் அதன்பிறகு களமிறங்கிய ரஹானேவும், வெங்கடேஷ் ஐயரும் பார்ட்னர்ஷிப் வைத்து நன்றாக ஆடி ரன்களை குவிக்கத் தொடங்கினார்கள். ரஹானே 35 பந்துகளில் 8 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 61 ரன்களில் அவுட், இடையே வந்த ரமந்தீப் 1 ரன்னிலும், ரகுவன்ஷி 5 ரன்களிலும் அவுட்டாக, வெங்கடேஷ் ஐயர் 45ல் அவுட்.

 

பின்னர் ஆண்ட்ரே ரஸலும், ரிங்கு சிங்கு நின்று ஆடி அணியை வெற்றிக்கு நகர்த்த முயற்சித்தனர். ரஸலும் அவுட்டாக மொத்த பொறுப்பையும் தலையில் ஏற்ற ரிங்கு சிங் முடிந்தளவு அடித்து ஆடினார். முந்தைய சீசனில் செய்தது போல அடுத்தடுத்து சில சிக்ஸர்களை தாக்கியிருந்தால் கொல்கத்தாவை வெற்றிபெற செய்திருப்பார். ஆனால் பால் சரியாக சிக்காமல் போக கடைசி 3 பந்துகளில் 3 சிக்ஸர்கள் அடித்தே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ரிங்கு சிங்கால் 2 பவுண்டரிகளும் ஒரு சிக்ஸருமே அடிக்க முடிந்தது. இதனால் வெறும் 4 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோவிடம் கொல்கத்தா தோல்வியடைந்தது. என்றாலும் இதை ஒரு வெற்றிகரமான தோல்வி என்றே கொல்கத்தா ரசிகர்கள் சொல்லிக் கொள்ளலாம்.

 

4 போட்டியில் விளையாடி 2 வெற்றி 2 தோல்வி என்று இருந்த லக்னோ அணிக்கும், ரிஷப் பண்டுக்கும் இந்த மூன்றாவது வெற்றி ஆறுதலை தரும், லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடமிருந்தும்தான்!

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்