பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

Prasanth Karthick

செவ்வாய், 8 ஏப்ரல் 2025 (16:42 IST)

கிரிக்கெட் வீரர்கள் தங்கள் ஓய்வுக்கு பிறகு அரசியலுக்கு செல்வது அதிகரித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் கேதர் ஜாதவ்வும் இணைந்துள்ளார்.

 

இந்திய கிரிக்கெட் அணியில் பிரபலமான கிரிக்கெட் வீரராக இருந்தவர் கேதர் ஜாதவ். இந்திய அணியின் ஒருநாள், டி20, FC அணிகளில் பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டு வகையில் சிறப்பாக விளையாடியவர் கேதர் ஜாதவ். 2010ம் ஆண்டில் ஐபிஎல்லில் டெல்லி டேர்டெவில்ஸ் அணியில் இணைந்த கேதர் ஜாதவ் 29 பந்துகளில் 50 ரன்களை அடித்து குவித்தது அவர் மீது புகழ் வெளிச்சத்தை பாய்ந்த சம்பவங்களில் ஒன்று.

 

தொடர்ந்து இந்திய அணியின் அனைத்து பார்மெட்களிலும் ஓய்வு பெற்று விட்டாலும ஐபிஎல்லில் சன்ரைசர்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளில் விளையாடி வந்தார். கடந்த 2021 வரை சென்னை அணிக்காக விளையாடி வந்தவர் கேப்டன் தோனியின் நம்பிக்கைக்கு உரிய ப்ளேயராக இருந்தார்.  பின்னர் Unsold ப்ளேயர் ஆனார். 

 

இந்நிலையில் தற்போது கேதர் ஜாதவ் பாஜக கட்சியில் இணைந்துள்ளார். மகாராஷ்டிரா பாஜக அமைச்சர்கள், மாநில தலைவர் சந்திரசேகர் பவன்குலே முன்னிலையில் அவர் கட்சியில் இணைந்தார். ஏற்கனவே அவர் மகாராஷ்டிரா மாநில கிரிக்கெட் சங்கத்திற்காக விளையாடிவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்