இப்ப தெரியுதா ஏன் நான்கு ஸ்பின்னர்கள் வேணும்னு சொன்னேன்னு… ரோஹித்தின் மாஸ்டர் ப்ளானை வியக்கும் ரசிகர்கள்!

vinoth
வெள்ளி, 28 ஜூன் 2024 (08:16 IST)
இந்த உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட போது பலருக்கும் எழுந்த கேள்வி ஏன் அணியில் நான்கு ஸ்பின்னர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள் என்பதுதான். ஏனென்றால் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மைதானங்கள் வேகப்பந்துக்குதான் அதிகமாக ஒத்துழைக்கும் என்பதால் விமர்சனங்கள் எழுந்தன.

அப்போது பத்திரிக்கையாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மா “நான்தான் அணியில் நான்கு ஸ்பின்னர்கள் வேண்டும் எனக் கேட்டேன். அது ஏன் என்பதை இப்போது சொல்லப்போவதில்லை. அமெரிக்கா சென்றதும்  அந்த ரகசியத்தை வெளியிடுகிறேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் நேற்று அரையிறுதிப் போட்டியில் இந்திய அணியில் ஸ்பின்னர்களான அக்ஸர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகிய இருவரும்தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணிகளாக அமைந்தனர். இருவரும் 6 ரன்களுக்குள் ரன்ரேட்டை வைத்திருந்து 6 விக்கெட்களைக் கைப்பற்றினர். மற்றொரு ஸ்பின்னரான ஜடேஜா விக்கெட் எடுக்காவிட்டாலும் 3 ஓவர்கள் வீசி 16 ரன்கள் மட்டுமெ கொடுத்தார். இதைக் குறிப்பிட்டு இதற்காகதான் ரோஹித் நான்கு ஸ்பின்னர்கள் அணியில் கட்டாயம் வேண்டும் எனக் கேட்டுள்ளார் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்