நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

vinoth

வியாழன், 27 ஜூன் 2024 (11:02 IST)
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகளின் முதல் போட்டியாக தெனாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று காலை நடந்து முடிந்தது. இந்த போட்டியில். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான இலக்கை நிர்ணயித்தது.

இந்த இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா மட்டுமே 10 ரன்கள் சேர்த்து இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 60 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

இந்த தோல்வி குறித்து பேசியுள்ள ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷீத் கான் “கண்டிப்பாக ஒரு அணியாக இது ஏமாற்றமான முடிவுதான். நாங்கள் சரியாக பேட் செய்யவில்லை. அதற்கான சூழல் அமையவில்லை. ஆனால் எல்லாவிதமான சூழலுக்கும் தயாராக இருக்கவேண்டும் என்பதுதான் டி 20 போட்டிகளின் எழுதப்படாத விதி. நாங்கள் மிடில் ஆர்டரில் இன்னும் சிறப்பாக விளையாடியிருக்க வேண்டும். நிச்சயமாக கம்பேக் கொடுப்போம். இது ஒரு நல்ல தொடக்கம் என நினைக்கிறொம். எந்த ஒரு அணியையும் எங்களால் வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளது” எனக் கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்