குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

vinoth

வியாழன், 27 ஜூன் 2024 (10:41 IST)
உலகக் கோப்பை தொடரின் முக்கியப் போட்டியான இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று இரவு 8 மணிக்கு கயானா மைதானத்தில் நடக்க உள்ளது. இந்த போட்டி நடக்கும் கயானா மைதானத்தில் அன்று மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கைகள் வெளியாகியுள்ளன.

கடந்த ஒரு வாரமாகவே அந்த பகுதியில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மாலை முதல் கனமழை பெய்ததால் போட்டி நடக்கும் மைதானம் முழுவதும் தார் பாயால் மூடப்பட்டுள்ளது. ஆனாலும் மழை நீர் தேங்கி குளம் போல காட்சியளிக்கிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகிவருகின்றன.

இதனால் போட்டி நடக்கும் வாய்ப்பு குறைந்துள்ளது. ஒருவேளை போட்டி நடக்கவில்லை என்றால் ரன்ரேட் அடிப்படையில் இந்திய அணி நேரடியாக பைனலுக்கு செல்லும். அதனால் மழை பெய்வது இந்தியாவுக்கு மகிழ்ச்சியான செய்திதான். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்