அதன் பின்னர் சூதாட்ட சர்ச்சைகளில் சிக்கி அவர் தன் புகழைக் கெடுத்துக் கொண்டார். ஓய்வு பெற்ற பின்னர் கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். இதற்கிடையில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹைதராபாத் கிரிக்கெட் சங்கத் தலைவராக முகமது அசாருதீன் தேர்வானார். தலைவர் பதவிக்கு நடந்த தேர்தலில் அசாருதீனுக்கு 173 வாக்கு களும், அவரை எதிர்த்து போட்டி யிட்ட பிரகாஷ் சந்த் ஜெயினுக்கு 73 வாக்குகளும் கிடைத்தன.
அப்போது அவரது பதவிக் காலத்தில் ஐதராபாத் மைதானத்தில் இருந்து விவிஎஸ் லக்ஷ்மன் பெயரிலான ஸ்டாண்ட்டை முகமது அசாரூதின் ஸ்டாண்ட் என்று பெயர் மாற்றப்பட்டது. அதற்கு எதிராக நடந்த வழக்கில் இப்போது அந்த பெயர் மாற்றம் அதிகாரத் துஷ்பிரயோகம் என தீர்ப்பளிகப்பட்டு, தற்போது மீண்டும் விவிஎஸ் லஷ்மன் ஸ்டாண்ட் என்ற பெயரே மீண்டும் மாற்றப்படவுள்ளது.