வரலாற்றில் இன்று… முதல் முதலாக ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்கு சென்ற தென்னாப்பிரிககா!

vinoth

வியாழன், 27 ஜூன் 2024 (08:48 IST)
உலகக் கோப்பை தொடரின் அரையிறுதிப் போட்டிகளின் முதல் போட்டியாக தெனாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதும் போட்டி இன்று காலை நடந்து முடிந்தது. இந்த போட்டியில். இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் 56 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து மோசமான இலக்கை நிர்ணயித்தது.

இந்த இன்னிங்ஸில் ஆப்கானிஸ்தான் வீரர் அஸ்மத்துல்லா மட்டுமே 10 ரன்கள் சேர்த்து இரட்டை இலக்க ஸ்கோரை எட்டினார். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர். தென்னாப்பிரிக்கா தரப்பில் மார்க்கோ யான்சன் மறும் ஷம்சி ஆகியோர் தலா 3 விக்கெட்களும்,  ரபாடா மற்றும் நோர்ட்யே ஆகியோர் தலா 2 விக்கெட்களும் கைப்பற்றினர்.

இதையடுத்து ஆடிய தென்னாப்பிரிக்கா அணி 8.5 ஓவர்களில் ஒரு விக்கெட் மட்டும் இழந்து 60 ரன்கள் சேர்த்து இலக்கை எட்டியது. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா அணியின் கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக ஒரு ஐசிசி தொடரின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்