பலித்தே விட்டதே சேப்பாக்கம் பேனர் ஜோசியம்… அப்ப எல்லாம் முடிவுபண்ண பட்டதுதான் – ரசிகர்கள் கேள்வி!

vinoth
சனி, 25 மே 2024 (06:55 IST)
ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிபையர் போட்டி நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடந்தது. இந்த முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே சீரான வரிசையில் விக்கெட்டுகளை இழந்தது. க்ளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 50 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே ஐதராபாத் எடுத்துள்ளது.

இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத்தை விட மிக மோசமாக பேட் செய்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ரன்கள் சேர்க்கவில்லை. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 42 ரன்களும் துருவ் ஜுரெல் 55 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர். இதன் மூலம் மூன்றாவது முறையாக சன் ரைசர்ஸ் அணி இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது.

இந்நிலையில் இந்த போட்டி நடக்கும் முன்னரே சேப்பாக்கம் மைதானத்தில் பைனலில் கொல்கத்தா அணியும் சன் ரைசர்ஸ் அணியும் மோதும் என்று பேனர் வைக்கப்பட்டிருந்தது சர்ச்சைகளைக் கிளப்பியது. இப்போது அப்படியே நடந்துள்ளதால் எல்லாம் முன்பே “பிக்ஸ்” பண்ண பட்டதா என்று ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர். 
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்