உலகளவில் கிரிக்கெட்டின் முகமாக இருப்பவர் விராட் கோலி. அவர்தான் இன்றைய தேதியில் அதிகம் சம்பாதிக்கும் கிரிக்கெட் வீரராக உள்ளார். இதனால் அவரை சமூகவலைதளங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டே செல்கிறது.
விளையாட்டு வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் மெஸ்ஸி ஆகியோருக்கு அடுத்து அதிகம் பேரால் சமூகவலைதளங்களில் பின்தொடரப்படும் வீரராக கோலி இருக்கிறார். அதே போல ஐபிஎல் போட்டிகளில் அதிக ரன்கள் சேர்த்த வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் அவர் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மூன்று பவுண்டரிகள் அடித்ததன் மூலம் ஐபிஎல் தொடர்களில் 1000 பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில் 721 பவுண்டரிகளும் 279 சிக்ஸர்களும் அடக்கம்.