தோனியின் பேச்சைக் கேட்காத ருத்துராஜ்… அதனால்தான் அவர் விலக்கப்பட்டாரா?... கேலி செய்யும் ரசிகர்கள்!

vinoth

வெள்ளி, 11 ஏப்ரல் 2025 (06:58 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. அந்த அணி விளையாடிய ஐந்து போட்டிகளில் நான்கில் போட்டிகளில் தோற்று  புள்ளிப்பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது.

இதனால் ரசிகர்களே சிஎஸ்கேவை விமர்சித்து வரும் நிலையில், சிஎஸ்கே அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கையில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக மொத்தமாக இந்த தொடரிலிருந்து விலகுகிறார். இனி வரும் போட்டிகளில் அவர் பங்கேற்க மாட்டார் என்பதால், மீண்டும் தோனியை சிஎஸ்கேவின் கேப்டனாக அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

ஆனால் மற்றொரு தரப்பினரோ ருத்துராஜ், களத்தில் தோனியின் ஆலோசனைகளைக் கேட்காமல் தன்னிச்சையாக செயல்பட்டு, போட்டிகளில் தோற்றதால்தான் அவர் தொடரில் இருந்தே விலக்கப்பட்டுள்ளார் என்றும் அது சம்மந்தமாக சில வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்