ராஜஸ்தானை வச்சு செஞ்ச சன் ரைசர்ஸ் பவுலர்ஸ்… இறுதிப் போட்டியில் பாட் கம்மின்ஸ் & கோ!

vinoth

சனி, 25 மே 2024 (06:25 IST)
நேற்று சென்னையில் நடந்த இரண்டாவது குவாலிபையர் போட்டியில் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி வென்று இறுதிப் போட்டிக்கு சென்றுள்ளது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்த ஹைதராபாத் அணி ஆரம்பத்திலேயே சீரான வரிசையில் விக்கெட்டுகளை இழந்தது. க்ளாசன் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 50 ரன்கள் அடித்தார். இதனை அடுத்து 20 ஓவர்களில் ஒன்பது விக்கட்டுகளை இழந்து 175 ரன்கள் மட்டுமே ஐதராபாத் எடுத்துள்ளது. 

இந்த எளிய இலக்கோடு களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஐதராபாத்தை விட மிக மோசமாக பேட் செய்தது. அந்த அணி பேட்ஸ்மேன்கள் ஒருவர் கூட நிலைத்து நின்று ரன்கள் சேர்க்கவில்லை. அந்த அணியின் ஜெய்ஸ்வால் 42 ரன்களும் துருவ் ஜுரெல் 55 ரன்களும் அதிகபட்சமாக சேர்த்தனர்.

இதனால் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 139 ரன்கள் மட்டுமே சேர்த்து 39 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. இதன் மூலம் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை இறுதிப் போட்டியில் சந்திக்க உள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்