சென்னையின் முக்கிய 6 டேஞ்ஜரஸ் ஏரியா??

வெள்ளி, 10 ஏப்ரல் 2020 (12:02 IST)
சென்னையில் குறிப்பிட்ட 6 பகுதிகளில் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5,865 லிருந்து 6,412 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 169 லிருந்து 199 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் கொரோனா பாதிப்புடன் அனுமதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 478 லிருந்து 504 ஆக உயர்ந்துள்ளது.
 
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டுள்ள மாநிலங்களில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 1,364 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 834 பேரும், டெல்லியில் 720 பேரும், ராஜஸ்தானில் 463 பேரும், தெலுங்கானாவில் 440 பேரும், கேரளாவில் 357 பேரும், ஆந்திராவில் 348 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 163 பேருக்கு கொரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 45 பேரும், திருவிக நகரில் 24 பேரும், கோடம்பாக்கத்தில் 19 பேரும், அண்ணாநகரில் 17 பேரும், தண்டையார்ப்பேட்டையில் 14 பேரும், தேனாம்பேட்டையில் 12 பேரும் உள்ளனர். 
 
இதனால், இந்த பகுதிகள் மக்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய பகுதிகள் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்