இங்கிலாந்து அமைச்சர் வில்லிம்சன் ராஜினாமா! பிரதமர் ரிஷி சுனக் பதவிக்கு ஆபத்தா?

Webdunia
வியாழன், 10 நவம்பர் 2022 (21:01 IST)
இங்கிலாந்து  நாட்டு அமைச்சர் காவின் வில்லிம்சன் ராஜினாமா செய்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சி உறுப்பினரான சேர்ந்த இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் பதவியேற்றார்.

அவர் தான் பதவியேற்கும் போதே, இங்கிலாந்து நாட்டின் பொருளாதார சிக்கல், பொருளாதார நெருக்கடியை சீரமைப்பதாகத் தெரிவித்தார்.

ஆனால், இதற்கான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லை என்று ரிஷி சுனக் மீது விமர்சனங்கள் குவிந்து வருகிறது.

இதற்கிடையே, அமைச்சர் வில்லிம்சன் மீது சக எம்பியைத் துன்புறுத்தியதாக புகார் எழுந்ததை அடுத்து,  அவர் தன் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இவரது  ராஜினாமா  ரிஷி சுனக் ஆட்சிக்கு ஆபத்து ஏற்படுத்துமா என்ற கேள்விகள் எழுந்துள்ளதால், இங்கிலாந்து அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Sinoj

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்