இஸ்ரேலில் பொதுத்தேர்தல்: பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமாராக வாய்ப்பு

புதன், 2 நவம்பர் 2022 (21:36 IST)
மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேல் நாட்டில்  நடந்து வரும் பொதுத்தேர்தலில் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமராக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகிறது.

மத்திய கிழக்கு ஆசிய நாடான இஸ்ரேல் தொழில் நுட்பத்தில் உலக நாடுகளுக்கு முன்னோடியாகவும், விவசாயத்துறையில் தொழில் நுட்ப உதவியுடனும், அறியல் முறையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் இஸ்ரேல் நாட்டின் பாரளுமன்றம் கடந்த ஜூன் மாதம் கலைப்பட்டு பொதுத்தேர்தலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எனவே இடைகால பிரதமராக யாய்ர் லாபிட் நியமிக்கப்பட்டார்.

இத்தேர்தல்  நவம்பரில்  நடக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி,  இத்தேர்தல்  காலையி தொடங்கி இரவு 10 மணி வரைக்கும் நடந்தது. மக்கள் அதிக ஆர்வத்துடன் வந்து ஓட்டுப்போட்டதால்,   வாக்கு சதவீதம் அதிகரித்துள்ளது.

இத்தேர்தலில், முன்னாள் பிரதமர் பெஞ்சமின் நேத்தன்யாகு மீண்டும் பிரதமாராகத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.

Edited by Sinoj

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்